search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுநல வழக்கு"

    பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. #SupremeCourt #10pcreservation #economicalweakersection
    டெல்லி:

    பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் (இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-வது திருத்தத்தின் மூலம்) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா நிறைவேறியது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. சமத்துவத்துக்கான இளைஞன் (Youth for Equality) என்ற அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #SupremeCourt #10pcreservation #economicalweakersection 
    கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த பா.ஜனதா பெண் நிர்வாகி ஷோபா சுரேந்திரனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். #BJP #ShobhaSurendran
    திருவனந்தபுரம்:

    கேரள பா.ஜனதா பொதுச் செயலாளராக இருப்பவர் ஷோபா சுரேந்திரன். இவர் கேரள ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார்.

    அதில் சபரிமலையில் மத்திய மந்திரி மற்றும் ஐகோர்ட்டு நிதிபதி ஆகியோரை போலீசார் அவமதித்ததாகவும், பக்தர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைப்பதாகவும், அத்துமீறி செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது தனிப்பட்ட விளம்பரத்திற்காக இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து கோர்ட்டின் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று ஷோபா சுரேந்திரனை நீதிபதி கண்டித்தார். மேலும் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    கோர்ட்டு விதித்த அபராதத்தை 2 வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அபராத தொகை இரட்டிப்பாக்கப்படும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ஷோபா சுரேந்திரன் கோர்ட்டில் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.  #BJP #ShobhaSurendran


    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #TNLocalBodyElections #SupremeCourt
    புதுடெல்லி:

    தமிழகத்தை சேர்ந்த வக்கீல் ஜெயசுகின். சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட கூடிய மேயர் உள்ளிட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல், இழுத்தடிக்கப்படுகிறது.

    உள்ளாட்சி தேர்தலை கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தி முடித்து இருக்க வேண்டும். ஆனால், இதுவரை நடத்தப்படவில்லை.

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு நிர்வகிக்கிறது. 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த சிறப்பு அதிகாரிகளின் பணியை நீட்டித்து வருகிறது.

    தொகுதி வரையறை தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் காரணம் கூறுகிறது.


    ஆனால், நிலுவையில் உள்ள இந்த வழக்கிற்கும், தேர்தல் நடத்துவதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. இதன்பின்னரும், இதே காரணத்தை கூறி தேர்தல் நடத்தாமல், மாநில தேர்தல் ஆணையம் இழுத்தடிக்கிறது.

    மேலும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர், ஒரு பிரமாண மனுவை தாக்கல் செய்தார்.

    அதில், உள்ளாட்சி தேர்தலை 2018-ம் ஆண்டு ஜனவரிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால், இந்த உத்தரவாதத்தை இதுவரை நிறைவேற்றாமல், அவர் இழுத்தடிக்கிறார். மெத்தன போக்குடன் மாநில தேர்தல் ஆணையம் செயப்பட்டு வருகிறது.

    மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய பல நூறு கோடி ரூபாய் நிதி உதவிகள் கிடைக்காமல் போய் உள்ளது. பல நிர்வாக ரீதியான சிக்கல்கள் உள்ளன. எனவே, 10 நாட்களுக்குள் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் மதன் லோகு, அப்துல் நஷீர், தீபக் குப்தா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரர் ஆஜராகி, ‘பிரமாண மனுவில் ஜனவரிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்து விட்டு, அதை செயல்படுத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் மெத்தனமாக உள்ளன’ என்று கூறினார்.

    இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘பிரமாண மனுவில் உத்தரவாதத்தை குறிப்பிட்டு, கோர்ட்டு தாக்கல் செய்து விட்டு, அதை நிறைவேற்றாமல் இருப்பது சரியான நடவடிக்கை இல்லை. பிரமாண மனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாகத்தான் அர்த்தம்.

    அதனால், ஏன் உத்தரவாதத்தை அளித்து விட்டு அறை நிறைவேற்றவில்லை? ஏன் பொய்யான உத்தரவாதம் தரப்பட்டது? என்பதற்கு விரிவான பதிலை 4 வாரத்துக்குள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யவேண்டும்’ என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.#TNLocalBodyElections #SupremeCourt
    பெண்கள் கூறும் பாலியல் தொல்லை புகார்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை உடனடியாக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். #SupremeCourt #MeToo
    புதுடெல்லி:

    சினிமா துறை உள்ளிட்ட பல்வேறு துறை களைச் சேர்ந்த பெண்கள், தாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து ‘மீ டூ’ இயக்கத்தின் மூலம், புகார் கூறி வருகிறார்கள். நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பாலியல் புகார்களுக்கு ஆளாவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகார் தெரிவிக்கும் பெண்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

    இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக எம்.எல்.சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மீ டூ’ இயக்கத்தின் மூலம் பெண்கள் கூறும் பாலியல் தொல்லை புகார்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்றும், மேலும் அப்படி புகார் தெரிவிக்கும் பெண்களுக்கு தேவையான உதவிகளையும், பாதுகாப்பையும் வழங்குமாறு தேசிய பெண்கள் நல ஆணையத்துக்கு கட்டளையிட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மனுதாரர் எம்.எல்.சர்மா நேற்று ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், உரிய நேரத்தில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்கள்.
    நாட்டில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 427 நீதிபதிகள் பதவிகளில் உரியவர்களை நியமிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. #PILfiledinSC #427judgesvacancy
    புதுடெல்லி:

    நாடு முழுவதிலும் உள்ள  உயர் நீதிமன்றங்களில் சில நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாகவே இருந்து வருகிறது. கொலீஜியம் முறையில் அவ்வப்போது நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டாலும், ஆண்டுதோறும் சுமார் 80 நீதிபதிகள் ஓய்வுபெற்று செல்வதால் நீதிபதிகள் பற்றாக்குறை மிகுதியாக காணப்படுகிறது.

    அவ்வகையில், கடந்த 31-8-2018 நிலவரப்படி மத்திய நீதித்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் காணப்படும் தகவலின்படி நாட்டில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 427 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், இந்த  பதவிகளில் உரியவர்களை நியமிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. #PILfiledinSC  #427judgesvacancy 
    ×